Thursday, May 5, 2011

மஹா பெரியவா

இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.

ஈச்சங்குடி கணேசயர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோ ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சோல்லிவிட்டார்கள்.

பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசயர்.

‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல் என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாக்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சோல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.

அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது. (துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)"

- ஸ்ரீ மடம் பாலு

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த ரஷ்ய அமெரிக்க அறிஞர்கள் மகா ஸ்வாமிகளை தரிசித்தார்கள்.

பெரியவர்கள்: ரஷ்ய மொழியில் சம்ஸ்கிருதம் கலந்திருந்தாலும் அந்த நாட்டின் வடகோடிப் பகுதியில் பேசும் மொழியில் சம்ஸ்கிருதம் இருக்கிறதோ?" ரிபகோவ் அசந்துவிட்டார், வாஸ்தவந்தான்; இல்லை" என்றார்.

பெரியவர்கள்: உங்கள் நாட்டுக்கு ரிஷிவர்ஷம் என்று பெயர். காரணம் யாக்ஞவல்க்யர் போன்ற ரிஷிகள் அங்கே தான் வேதத்தைப் பற்றி ஆவுக்கூடம் ஒன்றை நிறுவினார்கள்.

மேலும் பல செய்திகளைக் கூறி மெசிலிர்க்கச் செய்தார். நாங்கள் உத்தரவு வாங்கிக்கொண்டு கிளம்பும்போது ரிபகோவ் பெரியவரிடம்: நான் இந்துவாக என்ன செய்ய வேண்டும்?" என்றார்.

ஒண்ணும் செயாமலேயே நீர் இந்துதான்."

அவர் திருப்தியடையாமல், எனக்கு ஓர் இந்துப் பெயர் வேண்டுமே" என்றார். பெரியவர் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே வெள்ளை தாடியோடு இவரைப் பார்த்தாலே ரிஷி போல இருக்கிறார் அல்லவா? ‘ரிஷி’ என்றே பெயர் வைத்துக் கொள்ளட்டும்" என்றார்கள். ரிபகோவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்போது ரிஷி (ரிபகோவ்) மாஸ்கோவில் ராமகிருஷ்ண மடம் கிளை தொடங்கியுள்ளார்.

No comments:

Post a Comment