Saturday, January 8, 2011

வாழ்க்கை முறை

இன்றைய காலக் கட்டத்தில் ஓபிசிட்டி என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு நம்முடைய இன்றைய நாகரிக வளர்ச்சி பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறையும் மிகப் பெரிய காரணிகளாக விளங்குகின்றன.
ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு, எடுத்துக் கொண்டால் கூட அன்று, இருந்த வாழ்க்கைமுறைக்கும் இன்று நாம் வாழும் வாழ்க்கை முறைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.
அன்று டி.வி, மிக்சி, கிரைண்டர் வாக்யூம் கிளீனர் எல்லாம் மிகப்பெரும் செல்வந்தர் வீடுகளில் மட்டுமே காணப் பட்டன. இன்று இந்த பொருட்களெல்லாம் இல்லாத வீடுகளே இல்லை. மேலும் இவையெல்லாம் இல்லை என்றால் ஏதோ புழு பூச்சியைப் பார்ப்பது போல்தான் சமூகத்தால் பார்க்கப் படுவது நிதர்சனமான உண்மை. ஒரு காலத்தில் ஆடம்பரம் என்ற நிலைமை மாறி, வசதி என்ற நிலையைக் கடந்து, இன்று அத்தியாவசியம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். மேற்படி சாமான்கள் எல்லாம் இல்லாமல் நம்மால் ஒரு வேளை கூட காலம் தள்ள முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டோம்.
என் சிறு வயதில் என் அம்மா  , அதிகாலையில் எழுந்து கிணற்றில் தண்ணீர் இறைத்து, குளித்து வாசலை  பெருக்கி மெழுகி குனிந்து கோலமிட்டு, பிறகு சமையல் செய்ய ஆரம்பிப்பார்கள். சமையலறையிலும், மிக்சி கிரைண்டர் என்று எந்த உபகரணமும் இருக்காது. காய்கறிகளை எல்லாம் நறுக்கி, அரைக்க வேண்டியவற்றை அம்மி மற்றும் ஆட்டுக் கல்லில் அரைத்து, இடிக்க வேண்டியவற்றை உரலில் போட்டு இடித்து.....இப்படி எல்லாம்தான் சமைக்க வேண்டி இருந்தது. அது மட்டுமில்லாமல், இன்று இருப்பது போல் அன்று சமையல் மேடை எல்லாம் இருந்ததில்லை. தரையில் மணி அடுப்பு இருக்கும். அதில் அடுப்புக்  கரியைப் போட்டு தணல் உண்டாக்கி அதில் தான் சமைக்க வேண்டும். சாதாரணமாக சாதம் வடிப்பதற்கு மண்  பானையைத் தான் உபயோகிப்பார்கள். என் தந்தையார் மத்திய அரசாங்க ஊழியர் என்பதால் எங்கள் குடும்பம் upper middle class என்ற நிலையில் இருந்தது. எனவே எங்கள் வீட்டில் மண்பானைக்கு பதிலாக வெண்கலப் பானையில் சாதம் வடிக்கும் பழக்கம் இருந்தது. குக்கரெல்லாம் அப்போது கிடையாது.
அதைப் போலவேதான் துணி துவைப்பது வீடு பெருக்குவது என அத்தனை வேலைகளையும் என் அம்மாவேதான் செய்வார். எதற்கும் மெஷின் கிடையாது. மாலையானால், அக்கம் பக்கத்து பெண்களுடன் சேர்ந்து கோவிலுக்கு நடந்து செல்வார்கள். இப்படிப் பட்ட வாழ்க்கை முறையினால், அவர்களுக்கு தனியே உடற்பயிற்சி எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
இன்றைய அவசர உலகில் அப்படிப் பட்ட வாழ்க்கை முறையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் மட்டுமல்லாமல் சாத்தியமும் இல்லை. எனவே சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, துணி துவைப்பது என்று அனைத்து வேலைகளையும் செய்தாலும் உடற் பயிற்சிக்கு என்று தனியே பணத்தையும் காலத்தையும் விரயம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. அது மட்டுமில்லாமல், இன்று உணவு உள்பட அனைத்திலும் நமக்கு மிக அவசரம். நின்று நிதானமாக வேக வைத்து நன்கு சுவைத்து சாப்பிடக் கூட நமக்கு நேரமில்லை. எல்லாம் பதப் படுத்தப் பட்ட fast food தான் இன்றைய சாய்ஸ். உடற்பயிற்சி அவசியம் என்று தெரிந்தவர்கள் கூட எத்தனை பேர் நேரம் தவறாமல் உடற் பயிற்சி செய்கிறார்கள்? ருசியாக உள்ளது என்பதால், அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கிய பாக்கெட் உணவு வகைகளை ரெடி மேடாக வாங்கி உள்ளே தள்ளிவிட்டு டிவி முன்போ அல்லது கம்ப்யூட்டர் முன்போ அமர்ந்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள்  உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு என எல்லா  சமாச்சாரங்களும் எக்கச் சக்கமாக ஏறிவிடுகின்றன. குழந்தைகளுக்கோ கேட்கவே வேண்டாம். டிவியில் காட்டப் படும் கலர் கலரான பாக்கெட் உணவு வகைகள்தான் அவர்களின் முழு நேர உணவு. முன்பு மாலையில் பள்ளி விட்டு வந்த உடன் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் ஓடி விளையாடுவது என்பது மறைந்தே போய்விட்டது. மாலை வீடு திரும்பியுடன், டியுஷன்,பாட்டு கிளாஸ், டான்ஸ், கராத்தே அப்புறம் வீட்டு பாடம். இரவு மீண்டும் ரெடி மேட் உணவு பிறகு தூக்கம்...இதுதான் அவர்களின் தினசரி சுழற்சி. எப்போதாவது அரிதாக நேரம் கிடைத்தால் வீடியோ கேம்ஸ்.
இப்போதுள்ள நகர வாழ்க்கையில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது பெரியவர்களுக்கே தெரிவதில்லை.அதற்கான நேரமும் இல்லை. ஆர்வமும் காட்டுவதில்லை. பிறகு குழந்தைகளை என்னவென்று சொல்வது?
அவ்வளவு ஏன்? தங்கள் குழந்தைகளுடன் எத்தனை பெற்றோர் நேரத்தை செலவிடுகிறார்கள்?
இன்று கிட்டத் தட்ட அனைத்துக் குடும்பங்களிலும் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். அது பலருக்கு அவசியமானாலும் கூட சிலர் பாஷனுக்காகவோ அல்லது போழுபோக்குக்காகவோ செல்கிறார்கள்.
அப்படிப் பட்ட குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் நிலை அதோகதிதான்.
அதையும் ஆராய்வோம்.....

3 comments:

Shanthi said...

Neengal solvadhu sari. Aanalum, maatram enbadhu samudhaaya valarchikku inriamaiyaadhadhu. Matrangal illavidil, naam anaivarum karkaala manidhargalaagave irundhiruppom. Neegal kurippidum ammi, a'ttukkal ellam ma'trathin vilaivugale. Appodaiya kaalathu valarndha na'garigathin udhaaranangale aagum. Ma'trangalai yetrukkolladha samudhaayam munnetram adaivadhu kadinam. Tamizh naattil Aangilathai thadai seivadhai idharku udhaaranamaaga kooralam.:-)
Nammudaiya indraiya soozhalil, nalla pazhakkangalai ookkuvippadhe idharkku sariyaana vazhi.

Srividhyamohan said...
This comment has been removed by a blog administrator.
Devi said...

Nee cholvadhu sari.Maximum we should avoid fast food.

Post a Comment