Saturday, January 8, 2011

இந்த பிளாக்கைப் பற்றி.....

வணக்கம்.
இந்த ப்ளாக்கின் உள்ளே நுழைவதற்கு முன்பு என்னைப் பற்றி சில விஷயங்கள்:
நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். படிப்பில் படு சுட்டி. கிளாசில் எப்போதுமே நான்தான் first. சமுதாய அக்கறையோ அபாரம். மூன்று வயதிலேயே உலக விஷயங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்துவிட்டேன். படிப்பு, விளையாட்டு, பாட்டு, டான்ஸ், பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி என எல்லாத் துறைகளிமே மிகச் சிறு வயதிலேயே சிறந்துவிளங்கினேன்.....என்றெல்லாம் சொல்லிக் கொள்ள எனக்கும் ஆசைதான்...ஆனால் என்ன செய்வது.... இவற்றில் ஒன்று கூட நடக்கவில்லையே....
என்னைப் பற்றி சொல்வதானால்....காலையில் எழுந்து பல் தேய்த்தேன்...காபி குடித்தேன்...குளித்து சாப்பிட்டேன்...பள்ளி சென்றேன்....
பள்ளி மற்றும் கல்லூரியில் எல்லாம் சராசரி ரகம். பாஸ் செய்துவிடுவேன்...சங்கீதத்தில் ஆர்வம் இருக்கும் அளவுக்கு அறிவு கிடையாது. டான்ஸ் பார்க்கப் பிடிக்கும். சமையல்.......யாராவது. செய்து போட்டால் சாப்பிடப் பிடிக்கும். சமூக அக்கறை.......அதைப் பற்றி
 நிறைய  பேசத் தெரியும். .....இவைதான்  எனது  தகுதிகள்......வாசகர்களுக்கு என்னுடைய இந்த அறிமுகம் போதும் என நினைக்கிறேன். இந்த சுய புராணத்தை இத்துடன் முடித்துக் கொண்டு இந்த பிளாக்கைப்  பற்றிக் கூறிவிடுகிறேன்.

   இந்த விஷயம்தான்  என்றில்லாமல் எது வேண்டுமானாலும் இங்கே இருக்கும். அறிவு இருப்பவன்தான் ஐடியா கொடுக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? இந்தியா ஒரு சுதந்திர நாடு. இங்கே யாரும் யாருக்கும் அறிவுரையோ ஐடியாவோ தாராளமாகக் கொடுக்கலாம். இந்த பூர்ண சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த பிளாக்கைத் துவங்குகிறேன்.

இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கத்தையும் விட்டுவிட்டு பிளாக் எழுத ஆரம்பித்துவிட்டேன். இந்தத் துணிச்சல் எப்படி வந்தது.....எனக்கு இருக்கும் அனுபவம் என்ன சாதரணமானதா என்ன? மிகச் சிறு வயதிலேயே தொடங்கிவிட்ட ஆர்வமல்லவா அது....பள்ளி நாட்களில் விதம் விதமான கற்பனை காரணங்களைக் கண்டுபிடித்து  ஒவ்வொரு வாரமும் நான் எழுதிய விடுப்புக் கடிதங்கள்....வாரத்துக்கு வாரம் வித்யாசம் ...அதுதான் என் விடுப்புக் கடிதம்...இப்படி எல்லாம்  எழுத்துத் துறையில் என்னை நானே பெரிய பிஸ்தா என்று நினைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்த பிறகுதானே தெரிகிறது......பிஸ்தாவாவது முந்திரியாவது....ஒரு பருப்பும் வேகவில்லை என்பது.....இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில்  எழுதுவதற்கு பேப்பர் பேனா எல்லாம் எதுவும் தேவையேயில்லை.....பிளாக் தொடங்கிவிட்டேன்....என்ன எழுதுவது....உனக்கு ஒரு மாற்றம் தேவை என்றார்கள்....நானும் ட்ரெஸ் மாற்றிக் கொண்டேன். நாற்காலியை மாற்றினேன்..சிகை அலங்காரத்தை மாற்றினேன்....அவ்வளவு ஏன்...டூத் பிரஷைக் கூட  மாற்றிப் பார்த்துவிட்டேன்....ஊஹூம்  ஒரு மாற்றமும் இல்லை    இப்படி மாற்றி மாற்றி எதை மாற்றினாலும் ஒரு மாற்றமும் இல்லாமல் மிஞ்சியது ஏமாற்றாம் மட்டுமே. ....எழுதுவதானால் எதைப் பற்றி..எழுதுவது....starting problem...
இந்த ஆரம்ப சிக்கல் மிகப் பெரிய மேதைகளுக்குக்
 கூட சர்வ சாதாரணமாக வருவதுண்டாம்....(சந்தடி சாக்கில்... நானும் ஒரு 
மேதைதான் என்று என்னை பற்றி    பறைசாற்றிக் கொள்ள ஒரு நல்ல சான்ஸ் ).ஸ்டார்டிங் ப்ராப்ளம் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது....ஸ்டார்டிங் ப்ராப்ளம் வந்துவிட்டால் நம் ஊரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒரு ஐடியா செய்வார்கள்...தங்களது வாகனத்தை இந்த பக்கம் ஒரு 40 டிகிரியும் அந்த பக்கம் ஒரு 40 டிகிரியுமாக சாய்ப்பார்கள். பிறகு வண்டி சரியாக ஓட ஆரம்பித்துவிடும்...சமீபத்தில் நாசாவினால் அனுப்பப் பட்ட அட்லாண்டிஸ்  விண்கலத்திலும் ஸ்டார்டிங் ப்ராப்ளம்தான் என்றார்கள். நாசா காரர்கள், நமது இந்திய இளைஞர்களின் இந்த உக்தியை பரிசீலிப்பது நல்லது.

சரி....விஷயத்துக்கு வருவோம்...
எந்த விஷயத்துக்கு வருவது....எந்த விஷயமாக இருந்தாலும்...அதை சொல்லும் முறை என்று ஒன்று உள்ளது....அதற்கு KISS தான் சிறந்த வழி. KISS என்றதும் வாசகர்கள் வேறு ஏதோ கற்பனைக்கு சென்று விட வேண்டாம்....KISS என்றால்...keep it simple  and sure  என்று அர்த்தம்..எந்த விஷயமாக இருந்தாலும் அதை எளிமையாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதைத்தைத்தான்
..சுருக்கமாகக் கூறினேன்....ஸ்டார்டிங் ப்ராப்ளதிற்கு அடுத்தது இனி ஒவ்வொரு ப்ராப்ளமாகப் பேசியே தீர்ப்போம்....
இப்படிக்கு
நாரதர்

No comments:

Post a Comment